ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை : சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவவை வீழ்த்திய நியூசிலாந்து

டி20 உலகக்கோப்பை : சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவவை வீழ்த்திய நியூசிலாந்து

நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து அணி வெற்றி

T20 World Cup | டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiasydneysydneysydney

    8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 12 போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. குரூப் 1 முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.  சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடியில் பின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனையடுத்து அடுத்து வில்லியம்சன் 23 ரன்களும் , பிலிப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் டெவோன் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 200 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வுட் 2விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

    201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். தொடக்க அதிரடி வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஆரோன் பின்ச், மிட்டெல் மார்ஷ், கிளேன் , ஸ்டோயின்ஸ், டிம் டேவிட் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    அதிகப்பட்சமாக மேக்ஸ்வெல் மட்டும் 28 ரன்கள் எடுத்தார். 17.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் திம் சவுதி மற்றும் சுழல்பந்து வீச்சாளர் சாண்டனர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சூப்பர் 12 போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Australia, New Zealand, Sydney, T20 World Cup