Home /News /sports /

இனி டி20 பேட்ஸ்மென்களுக்கு ஜாக்பாட்தான் - ஐசிசியின் புதிய அதிரடி டி20 விதிமுறை அறிமுகம்

இனி டி20 பேட்ஸ்மென்களுக்கு ஜாக்பாட்தான் - ஐசிசியின் புதிய அதிரடி டி20 விதிமுறை அறிமுகம்

ஐசிசி டி20 புதுவிதி அறிமுகம்

ஐசிசி டி20 புதுவிதி அறிமுகம்

டி20 கிரிக்கெட்டில் புதிய விதிமுறை அறிமுகமாகியுள்ளது, இது ஓவர்களை குறித்த நேரத்தில் வீசவில்லை எனில் பீல்டிங் அணி எத்தனை ஓவர்கள் பின் தங்கியிருந்ததோ அந்த ஓவர்களிலெல்லாம் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 5 பீல்டர்களுக்குப் பதிலாக 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்கவும் ...
    டி20 கிரிக்கெட்டில் புதிய விதிமுறை அறிமுகமாகியுள்ளது, இது ஓவர்களை குறித்த நேரத்தில் வீசவில்லை எனில் பீல்டிங் அணி எத்தனை ஓவர்கள் பின் தங்கியிருந்ததோ அந்த ஓவர்களிலெல்லாம் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 5 பீல்டர்களுக்குப் பதிலாக 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதாவது பீல்டிங் அணி தங்கள் இன்னிங்சின் கடைசி ஓவரின் முதல் பந்தை குறித்த நேரத்தில் வீசும் நிலையில் இருக்க வேண்டும் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டாலோ, நேரம் மாற்றியமைக்கப்பட்டாலோ கடைசி ஓவரின் முதல் பந்தை வீசும் போது அது விதிமுறையில் குறித்த நேரமாக இருக்க வேண்டும் அப்படி குறித்த நேரத்தை கடைசி ஓவரின் முதல் பந்து வீசும் போது பீல்டிங் அணி அடையவில்லை, எனில் ஒரு பீல்டர் 30 யார்டு சர்க்கிளுக்குள் கொண்டு வரப்படுவார், ஒரு பீல்டர் வெளியே குறைபாடுடன் வீச வேண்டியிருக்கும்.

    சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீசும் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசாவிட்டால் அந்த அணியின் கேப்டன், வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் விதி நடைமுறையில் இருக்கிறது. ஐசிசியின் வீரர்கள் நடத்தை விதிகள் 2.22 பிரிவி்ல் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அதைக்கடந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசும் அணி அந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசாவிட்டால். 30 யார்ட்ஸ் வட்டத்துக்குவெளியே நிற்கும் 5 பீல்டர்களில் ஒரு வீரரை வட்டத்துக்கு உள்ளே கொண்டுவந்துவிட்டு, 4 பீல்டரை மட்டுமே வைத்து மீதமுள்ள 5 பந்துகளையும் வீச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

    இது பேட்ஸ்மென்களுக்குக் கொண்டாட்டம் தான். வழக்கமாக 30யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே 5 பீல்டர்களை கடைசி ஓவரில் பீல்டிங் செய்யும் அணி நிறுத்தலாம். ஆனால், இந்த விதியின்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரின் முதல் ப ந்தை பந்துவீசும் அணி வீசாவிட்டால், 30 யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே 4 வீரர்களை மட்டுமே நிறுத்த முடியும் இதனால் ஒரு உதாரணத்திற்கு ஒரு அணி 3 ஓவர்கள் பின் தங்கியிருந்தால் 3 ஓவர்களுக்கும் 30 யார்ட் சர்க்கிளுக்குள் கூடுதல் பீல்டர் கொண்டு வரப்பட்டு வெளியே 4 பீல்டர்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள், இது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.

    தோல்வி முகம் கண்டு வரும் அணி வெற்றி பெறக்கூடும், வெற்றி பெறும் நிலையில் இருக்கும் பீல்டிங் அணி தோற்கும். முதலில் பவுலிங் செய்யும் போது இது நடந்தால் கேட்க வேண்டாம். கடைசி 2 ஓவர்கள் பின் தங்கியிருந்தால் பேட்டிங் அணிக்கு 4 பீல்டர்கள்தான் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே என்பது கிட்டத்தட்ட ஓவருக்கு 15-20 ரன்களை கூடுதலாகக் கொடுக்கவல்லது, எனவே பேட்ஸ்மென்களுக்கும் பேட்டிங் அணிக்கும் ஜாக்பாட்தான்.

    மற்றொரு மாற்றமாக, ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு இன்னிங்ஸில் 2நிமிடங்கள் 30 வினாடிகள் இடைவேளை எடுக்கலாம். இந்த இடைவேளையை எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஐசிசி கூறியுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, ICC, T20

    அடுத்த செய்தி