ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு… ஜனவரி மாதம் நியமிக்கப்படும் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு… ஜனவரி மாதம் நியமிக்கப்படும் என தகவல்

பிசிசிஐ

பிசிசிஐ

உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியைத் தொடர்ந்து தேர்வுக்குழுவை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே மற்றும் மற்றும் சுலக்சனா மெயில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு வரும் 30ஆம் தேதி கூடி புதிய தேர்வுக் குழுவை நியமித்தது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. இதையடுத்து புதிய தேர்வுக் குழுவை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சேத்தன் சர்மா தலைமையில் இடம்பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ நீக்கியது.

இதையடுத்து இந்த குழுவில் இடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில் முன்னாள் வீரர்கள் சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் மற்றும் தெபசிஷ் மொகந்தி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். புதிய தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர் குறைந்தது 7 டெஸ்ட் மேட்ச் அல்லது 30 முதல் தர போட்டிகளில் ஆடி இருக்கவேண்டும் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டிருந்தது.

இதேபோன்று விளையாட்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று இருக்க வேண்டும், எந்த ஒரு கிரிக்கெட் கமிட்டியிலும் உறுப்பினராக இடம் பெற்றிருக்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வைக்கப்பட்டிருந்தன. தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில் புதிய தேர்வுக்குழு ஜனவரி மாதத்தில் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அரை இறுதி ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்…

இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து தேர்வுக்குழுவை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு…

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தேர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை நீக்கி, பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket