ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சர்வதேச கிரிக்கெட்டில் வந்துள்ள புதிய விதிமுறைகள் என்ன? யாருக்கு சாதகம்..?

சர்வதேச கிரிக்கெட்டில் வந்துள்ள புதிய விதிமுறைகள் என்ன? யாருக்கு சாதகம்..?

இந்திய அணி

இந்திய அணி

Cricket | சர்வதேச கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை புகுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

  சர்வதேச கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை புகுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில், தற்போது பந்துவீசுவதற்கு முன்பு, நான்-ஸ்டிரைக்கில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால் 'மன்கட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்யும் முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது, இனிமேல் ரன்-அவுட்டாக எடுத்துக்கொள்ளப்படும்.

  பேட்டிங் செய்யும் வீரர் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தால், புதிதாக வரும் வீரரே பேட்டிங் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், எதிர்முனையில் உள்ள வீரர் பாதி கிரீசை கடந்த போதும், அவர் பேட்டிங் செய்ய இயலாது.

  மேலும், பந்துவீச்சாளர் பந்துவீச வரும் போது, சக அணியை சேர்ந்த ஃபீல்டர், பேட்ஸ்மேன் கவனத்தை திசைதிரும்பும் வகையில் செயல்பட்டால், பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும்.

  ALSO READ | மோடி முதல் அனுஷ்கா சர்மா வரை... விராட் கோலியின் ஆட்டத்தை ரசித்து வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..

  அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால், கூடுதல் நேரத்தில் வீசப்படும் ஓவர்களுக்கு அரைவட்டத்திற்கு வெளியே 4 ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும். இது, பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக அமையும்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cricket