பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்

விக்கெட் விழும் போது அது நோபால் தானா என்று நடுவர்கள் ஆராய வேண்டுமென்ற விதியை ஐசிசி கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தியது.

Vijay R | news18
Updated: July 22, 2019, 3:09 PM IST
பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்
கோப்பு படம்
Vijay R | news18
Updated: July 22, 2019, 3:09 PM IST
நடுவர்களின் கவனக் குறைவால் நோ பாலில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி வெளியேறுவதை தவிர்க்க பிசிசிஐ விடுத்த வேண்டுகோளை ஐசிசி ஏற்றுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பு மிக முக்கியமானதாகும். அவர்களின் முடிவில் சில சமயம் தவறு ஏற்படுவதால் ஐசிசி சில புதிய விதிகளை கொண்டு வந்தது.

டிஆர்எஸ் முறைப்படி நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் ரிவியூ கேட்கலாம். இந்த விதி பலமுறை வீரர்களை காப்பாற்றி உள்ளது. ஆனால் இதன் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் தவறாக அதை பயன்படுத்தினால் டிஆர்எஸ் வாய்ப்பு இழக்கப்படும்.


பந்துவீச்சின் போது நோ-பால் போடுவதை நடுவர்கள் கவனிக்காமல் இருப்பது பல முறை டிவி ரிப்ளேவில் தெரிய வரும். பேட்ஸ்மேன்கள் அவுட்டாகும் போது, நோ-பால் என்ற சந்தேகம் வந்தால் மூன்றாவது நடுவரிடம் ஆலோசிப்பார்கள்.  அதையும் மீறி சில சமயம் கவனக்குறைவு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என்று நடுவர்கள் ஆராய வேண்டுமென்ற விதியை ஐசிசி கொண்டு வரவேண்டுமென பிசிசிஐ வலியுறுத்தியது. பிசிசியின் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள ஐசிசி முதல் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் நடைமுறை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

இதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டு சர்வதேச போட்டிகளிலும் இந்த விதியை பயன்படுத்தி கொள்ள ஐசிசி முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் நோ-பாலில் அவுட்டாகி வெளியேறுவதை தடுக்க முடியும்.

Loading...

Also Read : கேப்டன்களின் தலை தப்பித்தது...! ஐசிசியின் அடுத்த அதிரடியான முடிவு... அமலுக்கு வருகிறது புதிய விதி


Also Watch

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...