West Indies vs Australia| ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்

புதிய கேப்டன் அலெக்ஸ் கேரி.

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி-20 தொடரில், 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டனாக உள்ள ஆரோன் பிஞ்ச் முழங்கால் காயம் காரணமாக விலகினார்.

    ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக விலகியதால், முதலாவது ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி, ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக பொறுப்பில் இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான பதவியேற்கும் 26வது நபர் என்ற பெருமையை அலெக்ஸ் கேரி பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: உலகம் முழுதும் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி 50,000 பேரின் செல்போன் தகவல் களவாடப்பட்டதாக பரபரப்பு புகார்

    ஆஸ்திரேலியாவில் 3 வடிவங்களிலும் துணை கேப்டன் பாட் கமின்ஸ்தான், ஆனால் அவர் இந்தத் தொடரில் இல்லாததால் அலெக்ஸ் கேரிக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையும் படிங்க: India vs Srilanka | இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

    முன்பு டிம் பெய்னுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாகும் வாய்ப்பு அலெக்ஸ் கேரிக்கு இருந்தது, ஆனால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஏ அணியை சிட்னியில் 2ம் நாள் அலெக்ஸ் கேரி வழிநடத்திய விதம் குறித்து ஆலன் பார்டர் கடும் விமர்சனங்களை வைத்ததால் அலெக்ஸ் கேரியின் கேப்டன்சி வாய்ப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.

    அநேகமாக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நிரந்தரமாகவே அலெக்ஸ் கேரி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published: