Video: ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தால் கோபமடைந்த மேத்யூ ஹெய்டன்!

Never take Aussie’s for a joke: #MatthewHayden | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டியை மையப்படுத்தி ‘பேபி சிட்டர்’ என்ற விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. #INDvAUS

news18
Updated: February 12, 2019, 4:19 PM IST
Video: ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தால் கோபமடைந்த மேத்யூ ஹெய்டன்!
‘பேபி சிட்டர்’ விளம்பரத்தில் சேவாக். (Twitter)
news18
Updated: February 12, 2019, 4:19 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தை பார்த்து கோபமடைந்த முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. போட்டிகளின்போது இரு அணி வீரர்கள் இடையிலான ஸ்லெட்ஜிங் அதிக கவனம் பெற்றது.

குறிப்பாக, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை, ‘பேபி சிட்டர்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.

Rishab Pant, ரிஷப் பண்ட்.
ஆஸி. கேப்டன் டிம் பெய்னைக் கிண்டல் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (Video Grab)


அதற்கு பதிலடியாக, டிம் பெய்னை தற்காலிக கேப்டன் என்று ரிஷப் பண்ட் கிண்டல் செய்தார். இதனை அடுத்து, டிம் பெய்னின் சவாலை ஏற்கும் விதமாக அவரின் குழந்தையை ரிஷப் பண்ட் தூக்கிய வைத்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

ரிஷப் பண்ட், Rishab Pant
ஆஸி. கேப்டன் டிம் பெய்னின் குழந்தை உடன் ரிஷப் பண்ட். (Twitter)


வரும் 24-ம் தேதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை மையப்படுத்தி இந்தப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் இந்த ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தை எடுத்துள்ளது.
Loading...
அதில், ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சி அணிந்துள்ள சிறுவர்களுடன், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நடித்துள்ளார்.



ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில், “உங்களை எச்சரிக்கிறேன். ஆஸ்திரேலியர்களை ஒருபோதும் நகைச்சுவையாக எடுக்காதீர்கள்.. வீரு பாய். உலகக்கோப்பை யாரிடம் இருக்கிறது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.



ஜோ ரூட்டை ஓரினச்சேர்க்கையாளர் என திட்டிய வெ.இண்டீஸ் வீரர்: கடுமையாக எச்சரித்த அம்பயர்!

Also Watch..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...