தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரீஸைத் தாண்டாதீர்கள்: ஐசிசி ஃப்ரீ அட்வைஸ்!

Never Leave Your Crease With #MSDhoni Behind The Stumps: #ICC | கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன் நீஷமை, அட்டகாசமாக தோனி ரன் அவுட் செய்தார். #NZvIND

தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரீஸைத் தாண்டாதீர்கள்: ஐசிசி ஃப்ரீ அட்வைஸ்!
இந்திய அணி வெற்றி. (BCCI)
  • News18
  • Last Updated: February 5, 2019, 3:31 PM IST
  • Share this:
மகேந்திர சிங் தோனி, ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரிஸைத் தாண்ட வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலவச அறிவுரை வழங்கியுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. நேற்றுடன் (பிப்.3) முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன் நீஷமை, யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது அட்டகாசமாக ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.இதற்கிடையே, ஜப்பானைச் சேர்ந்த சினிமாத்துறை பிரபலமான யோகோ ஓனோ, தனது ட்விட்டரில் “நமது வாழ்வில் ஆரோக்கியமாக மற்றும் பிரகாசமாக இருக்க சில ஆலோசனை கூறுங்கள்” என பதிவிட்டிருந்தார். இதற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், “மகேந்திர சிங் தோனி, ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரீஸைத் தாண்ட வேண்டாம்” என அறிவுரை கூறியிருந்தது.அதாவது, உங்களுக்கென வாழ்க்கையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கோட்டை நீங்கள் எப்போது தாண்டக் கூடாது என்பதைக் குறிப்பிடும் விதமாக கூறப்பட்டிருந்தது.

#ICCRanking: 3 இடங்களில் முன்னேறினார் ‘தல’ தோனி!

பிரதமர் மோடியால் இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 போட்டிகள் இடமாற்றம்!

Also Watch...

First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்