நன்றி மறப்பது நன்றன்று... இந்திய அணிக்கு கவாஸ்கர் அறிவுரை

சுனில் கவாஸ்கர்

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப்பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்டு வித்தை மறந்துவிடக்கூடாது, அதை மனதில் வைத்து இந்திய அணி நி்ர்வாகம் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 • Share this:
  கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் பயணம் செய்து விளையாடி வந்தனர். நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, கட்டாக்கில் இந்தியா, இங்கிலாந்து ஒருநாள் போட்டி நடந்தது. இந்தத் தாக்குதலுக்குப்பின் ஒருநாள் தொடரை ரத்து செய்து இங்கிலாந்து வீரர்கள் தாயகம் புறப்பட்டனர். ஆனால், டெஸ்ட் தொடருக்காக மீண்டும் இங்கிலாந்து அணி இந்தியா வந்தனர். இதைத்தான் சுனில் கவாஸ்கர் குறிப்பிடுகிறார்.

  அதே போல் கொரோனாவினால் 5வது டெஸ்ட் ரத்து ஆனாலும் மீண்டும் வந்து இந்திய அணி 5வது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொடுப்பதுதான் நல்ல செய்கையாக இருக்க முடியும் என்கிறார் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் தொடரை ரத்துசெய்யாமல் டெஸ்ட் தொடரில் பங்கேற்று தங்களின் ஒப்பந்தத்தை முடித்தனர். இதை இந்திய அணியும் பின்பற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறும்போது, “ரத்து செய்யப்பட்ட ஓல்ட்டிராபர்ட் டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்துவதுதான் சிறந்தது. 2008-ம் ஆண்டு 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்து அணி நாடு திரும்பினர் பிறகு பாதுகாப்பு சூழல் கருதி டெஸ்ட் தொடரை விளையாடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியினர் மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடினர். அந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

  இந்த சம்பவத்தில் கெவின் பீட்டர்ஸன் தலைமையிலான இங்கிலாந்து அணியை ஒருபோதும் மறக்க முடியாது. அவர்தான் இங்கிலாந்து அணியில் பிரதான வீரர். ஒருவேளை கேப்டன் பீட்டர்ஸன் இங்கிலாந்து வாரியத்திடம் நான் இந்தியா செல்ல முடியாது, பாதுகாப்பு இல்லை என்று தெரிவி்த்திருந்தால், அனைத்தும் முடிந்திருக்கும்.

  ஆனால், கெவின் பீட்டர்ஸன் இந்தியாவுக்கு செல்ல விரும்பினார், மற்ற வீரர்களையும் சமாதானப்படுத்தி தொடருக்கு தயாராக்கினார். இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா வந்தது, டெஸ்ட்தொடரில் விளையாடியது. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 380 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்த அருமையான டெஸ்ட் ஆட்டமும் நடந்தது. ஆதலால், இங்கிலாந்து அணி செய்ததை மறந்துவிடாமல் நாமும் ரத்தான கடைசி டெஸ்ட்போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும்.

  எனவே அன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்ததை மறக்க வேண்டாம். பிசிசிஐ-யும் மீண்டும் ஆடலாம் என்று தெரிவித்துள்ளது, இங்கிலாந்து வாரியமும் இதை வரவேற்றுள்ளது, இரு நாட்டு வாரியங்களுக்கு இடையே உறவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்கிறார் கவாஸ்கர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: