HOME»NEWS»SPORTS»cricket never ever underestimate the indians australia head coach justin langer after india s series win mut

ரிஷப் பந்த் இன்னிங்ஸ் பென் ஸ்டோக்ஸ் இன்னிங்ஸை நினைவூட்டுகிறது: ஜஸ்டின் லாங்கர் ஆச்சரியம்

இந்தியர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள், அதில் அணியில் இடம்பெற்று ஆடுவதென்பது சாதாரணமல்ல, அது மிகக் கடினம்.

ரிஷப் பந்த் இன்னிங்ஸ் பென் ஸ்டோக்ஸ் இன்னிங்ஸை நினைவூட்டுகிறது: ஜஸ்டின் லாங்கர்  ஆச்சரியம்
பிரிஸ்பன், ரிஷப் பந்த், சிராஜ்.
  • Share this:

இந்திய வீரர்களை ஒரு போதும் எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம், மதிப்பிடக் கூடாது என்று தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு வெற்றியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள், தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியாவில் வென்றதோடு, அவர்களின் பிரிஸ்பன் கோட்டையும் தவிடுபொடியாக்கப் பட்டது, 1988-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பனில் தோற்ற பிறகு நேற்று ஆஸ்திரேலியா பிரிஸ்பனில் தோற்றது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:



மிகப்பிரமாதமான டெஸ்ட் தொடர், இறுதியில் யாராவது வெற்றி பெற வேண்டும், யாராவது தோல்வி அடைய வேண்டும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வென்றுள்ளது. எங்களை இந்தத் தொடர் தோல்வி நீண்ட காலம் பாதிக்கும்.

இந்தியாவுக்கு முழு பாராட்டுக்கள். பிரமாதமாக ஆடினார்கள், நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். இந்தியர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள், அதில் அணியில் இடம்பெற்று ஆடுவதென்பது சாதாரணமல்ல, அது மிகக் கடினம்.

என்னால் இந்திய அணியை நிரம்பவும் பாராட்ட முடியாது. முதல் டெஸ்ட் போட்டியில் 3 நாட்களில் தோற்கடித்த பிறகு இந்திய அணி மீண்டெழுந்தது. இது பெரிய விஷயம். பெரிய பாடம் என்னவெனில் நாம் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ரிஷப் பந்த்தின் இன்னிங்ஸ் எனக்கு ஹெடிங்லீயில் பென் ஸ்டோக்ஸ் விரட்டி வெற்றிப் பெற்றதையே நினைவூட்டுகிறது. இறங்கினார், எந்த ஒரு பயமும் இல்லை, அச்சமின்றி ஆடுகிறார், இதுதான் அவரைப் பாராட்டுவதற்குக் காரணம். நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ்.

இளம் ஷுப்மன் கில் நன்றாக ஆடினார் என்றே நான் கருதுகிறேன். இளம் பவுலர்கள் எங்களை தொடர்ந்து நெருக்கடியில் வைத்திருந்தனர். ஆம் இந்திய அணிக்கு என் முழு பாராட்டுக்கள் என்றார் லாங்கர்.

இந்த தொடர் வெற்றி மூலம் இந்தியா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 430 புள்ளிகளுடன் உள்ளது, நியூஸிலாந்து 420, ஆஸ்திரேலியா 332.
Published by:Muthukumar
First published: