ஓவர் த்ரோவில் கிடைந்த 4 ரன்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு நான் நடுவர்களிடம் சொல்லவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்து இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக்கோப்பையை வென்றது.
போட்டி டிராவில் முடிவடைய வெற்றி யாருக்கு என நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைந்தது. இதனால் பவுண்டரி எண்ணிக்கைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றியவர் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தார்.
நியூசிலாந்து வீரர் கப்தில் ரன்அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது போட்டியில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐசிசி விதிப்படி 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டுமென்றும் பலர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ‘எந்த ஒரு முடிவையும் களத்தில் உள்ள நடுவர்களே ஐசிசி விதிகளின்படி முடிவெடுப்பார்கள். நடுவர்களின் முடிவில் எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க முடியாது’ என்றார்.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் சென்று ஓவர் த்ரோவில் கிடைந்த 4 ரன்களை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கேட்டதாக செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை பெண் ஸ்டோக்ஸ் தற்போது மறுத்துள்ளார்.
இதுகுறித்து பெண் ஸ்டோக்ஸ், ‘ ஓவர் த்ரோவில் கிடைந்த 4 ரன்களை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு நான் நடுவர்களிடம் சொல்லவில்லை. நான் டாம் லாதமிடன் சென்று மன்னிப்பு மட்டுமே கேட்டேன், மற்றும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டேன்’ என்றார்
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.