ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

#NessWadia's Sentencing In Drug Case May Lead To #KXIP's #IPL Suspension | மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா, 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. (IPL)
  • News18
  • Last Updated: May 1, 2019, 4:34 PM IST
  • Share this:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இணை உரிமையாளரின் விபரீத செயலால் ஐ.பி.எல் போட்டியில் விளையாட அந்த அணிக்கு தடைவிதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த அணியின் இணை உரிமையாளராக பிரபல தொழிலதிபர் நெஸ் வாடியா மற்றும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா, 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் தனது சொந்த பயன்பாட்டிற்காகவே கஞ்சா வைத்திருந்தாக வாடியா கூறியுள்ளார். ஜப்பானில் கஞ்சாவிற்குத் தடை உள்ளதால் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Ness Wadia KXIP Team
பஞ்சாப் அணி போட்டியின்போது நெஸ் வாடியா (வலது).


இவரின் இந்த செயலால் ஐ.பி.எல் போட்டியில் விளையாட அந்த அணிக்கு தடைவிதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் விதிமுறைகளின்படி, அணிகளின் உரிமையாளர்கள் யாரும் அணிக்கும், தொடருக்கும், பிசிசிஐ அமைப்புக்கும், களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால், அந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அணி, தடையை எதிர்நோக்க வேண்டியது இருக்கும்.ஏற்கனவே, சூதாட்ட தரகர்களுடன் அணி உரிமையாளர்கள் தொடர்பில் இருந்ததாக கூறி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல், உரிமையாளர் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் பஞ்சாப் அணிக்கும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading