தோனி களத்தில் இருக்கும்வரை இந்திய அணியை ஜெயிக்க முடியாது - நியூசிலாந்து வீரர் நீஷம்

தோனியை மிகச்சிறந்த வீரர், அவருடைய சாதனைகளே அவரின் திறமைகள் பற்றி கூறும் என்று நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் நீஷம் தெரிவித்துள்ளார்.

தோனி களத்தில் இருக்கும்வரை இந்திய அணியை ஜெயிக்க முடியாது - நியூசிலாந்து வீரர் நீஷம்
மகேந்திர சிங் தோனி. (ICC)
  • News18
  • Last Updated: February 2, 2019, 4:58 PM IST
  • Share this:
தோனியின் விக்கெட்டை வீழ்த்தும்வரை இந்திய அணியை ஜெயிக்க முடியாது என நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் நீஷம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இந்திய அணி 4-வது போட்டியில் படுதோல்வி அடைந்தது. எனினும் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதித்துள்ளது.

நீஷம்5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (பிப். 3) நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம், ‘தோனி மிகச்சிறந்த வீரர். அவருடைய திறமைகள் குறித்தும் , உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியுமா என்பன போன்ற கேள்விகள் எழுவதை அதிக அளவில் பார்க்க முடிகிறது. அவருடைய சாதனைகளே அவரின் திறமைகள் பற்றி கூறும். தோனியின் விக்கெட்டை வீழ்த்தும் வரை ஜெயித்துவிட்டோம் என்று எதிரணியர் உறுதியாக கூற முடியாது’ என்று பேட்டியளித்துள்ளார்.

Dhoni, தோனி

முன்னதாக தோனியின் திறமைகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தநிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் அரை சதம் அடித்து அசத்தினார் தோனி.
Dhoni, தோனி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் தோனி அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்துள்ளார்


இதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தோனி 48 ரன்கள் அடித்தார். காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தோனி சேர்க்கப்படவில்லை.

Also watch

First published: February 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்