டி20 கிரிக்கெட் எழுச்சியும் சூதாட்டத்தின், ஊழலின் பரவலும் கிட்டத்தட்ட இணைவினையாக நிகழும் ஒன்று என்று கூறும் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்புத் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் டி20 தனியார் கிரிக்கெட் லீகுகள்தான் சூதாட்டத்தின் சந்தை என்கிறார்.
சமீபத்தில் அலெக்ஸ் மார்ஷல் சில தேர்ந்தெடுத்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து சுருக்கமாக: “கிரிக்கெட் ஊழல்வாதிகள் கிரிக்கெட்டை மட்டும் பிடித்துக் கொண்டுள்ளனர். சர்வதேச போட்டிகளில் ஊழல் செய்தவர்கள் இப்போது ஐரோப்பிய லீகுகளில் கைவரிசையைக் காட்டுகின்றனர். 3,000 யூரோக்கள் கொடுத்து மோசமாக ஆடு என்கின்றனர். இங்கு ஆடும் வீரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், புகலிடம் கோருபவர்கள், அகதிகளாக இருக்கின்றனர், இவர்களை சூதாட்ட சந்தை எளிதில் அணுக முடிகிறது அவர்களை ஆசை வலையில் விழ வைக்க முடிகிறது. பிரான்சைஸ் கிரிக்கெட், அதாவது தனியார் கிரிக்கெட் தான் இவர்களது சூதாட்ட சந்தை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா இவர்களிடம் ஒரு குறிப்பிடத்தக்க ஊழல் தடுப்பு அமைப்பு உள்ளது. தனியார் கிரிக்கெட்டின் பிரச்சனை என்னவெனில் யார் ஓனர், அவரது பின்னணி என்ன, அணி உரிமையாளரின் உண்மையான அடையாளம் என்னவென்பது தெரியாது. பெயருக்குத்தான் உரிமையாளர் ஆனால் அவருக்கு பின்புலத்தில் இருந்து செயல்படுபவர்கள் ஊழல் வாதிகள், சூதாட்டக்காரர்கள். யுஏஇ வீரர்கள் ஊழல் செய்யும் முன்பே நாங்கள் இடையீடு செய்து தடுத்து விட்டோம். நாங்கள் குற்றம் சாட்டிய அனைத்து வீரர்களுமே சூதாட்ட முயற்சியில் இறங்கியவர்களே.
கேப்டன்கள், தொடக்க ஆட்டக்காரர்கள்:
சூதாட்டக் காரர்கள், கேப்டன்களையும் தொடக்க ஆட்டக்காரர்களையும் குறிவைக்கின்றனர். தொடக்க பவுலர்களையும் குறிவைக்கின்றனர். இவர்களை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்று சூதாட்டக்காரர்கள் நம்புகின்றனர். அதாவது கேப்டனுக்குத் தெரிந்தவரைப் பிடிப்பார்கள், அவரை மடக்கி கேப்டனுடன் பழகி இதற்கு ஒப்புக் கொள்ளச் செய்வார்கள். கடந்த லங்கா பிரிமியர் லீகில் முன்னாள் வீரரும் போலீஸ் அதிகாரி ஒருவரும் ஈடுபட்டனர். டி20 கிரிக்கெட்டில் 2 ஓவர்கள் அதிகபட்சம் 4 ஓவர்களை வைத்து சூதாட்டம் நடத்துவார்கள், அந்த 4 ஓவருக்குத் தேவையான வீரர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வருவார்கள். இது டாஸ் அல்ல, நோ-பால் அல்ல, ஆட்டத்தின் ஒரு கட்டத்தையே தீர்மானிப்பார்கள்...
...இந்திய சூதாட்டச் சந்தை மிகப்பெரியது, இந்திய அரசுதான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும், என்றார் அலெக்ஸ் மார்ஷல்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.