VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!
VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!
காரை ஓட்டிச் சென்ற தோனி. (BCCI)
#MSDhoni takes #RishabhPant, #KedarJadhav for a ride on his Hummer in #Ranchi | 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியை விளையாடுவதற்காக ராஞ்சி வந்திறங்கிய இந்திய வீரர்களை தோனி தனது சொகுசு காரில் அழைத்துச் சென்றார். அந்தக் காரை அவரே ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றியது.
இதனை அடுத்து தொடங்கிய ஒரு நாள் தொடரில், முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவர் த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
இரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நாளை (மார்ச் 8) நடைபெற உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விமானம் மூலம் ராஞ்சி வந்து சேர்ந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட் ஆகியோரை தோனி தனது ஹம்மர் சொகுசு காரில் அழைத்துசென்றார். அத்துடன், அந்தக் காரை அவரே ஓட்டிச் சென்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.