இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி புனேவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணி 15.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.