• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs NZ| இந்தியாவுக்கு எதிரான டி20: கேன் வில்லியம்சன் விலகல்- டிம் சவுதீ கேப்டன்

IND vs NZ| இந்தியாவுக்கு எதிரான டி20: கேன் வில்லியம்சன் விலகல்- டிம் சவுதீ கேப்டன்

வில்லியம்சன்.

வில்லியம்சன்.

  • Share this:
    இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டிம் சவுதீ டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . நியூசிலாந்து அணி இன்னொரு இறுதிப் போட்டியில் தோல்வியுற்று ஏமாற்றமடைந்தது, ஆஸ்திரேலியாவை 1981-க்குப் பிறகு நாக் அவுட் சுற்றில் வீழ்த்தவே இல்லை, நியூசிலாந்து.

    இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

    இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூர் வருகை தந்தது. மேலும் டி 20 உலக கோப்பை தொடரில் ஏற்கனவே பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருந்ததால் அவர்கள் தனி விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு வந்தனர்.

    இந்த சூழலில் நடப்பு உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் தகுதிச்சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, உலக கோப்பையில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. அதோடு தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

    இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏனென்றால் கான்பூரில் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

    டிம் சவுதி (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் செய்ஃபர்ட் இஷ் சோதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: