இதுக்கு பேர் தான் டீம் ஓர்க்... காயமடைந்த ஜடேஜாவுக்கு வாழைப்பழ தோலை உரித்து உதவிய நவ்தீப் சைனி - வீடியோ

இதுக்கு பேர் தான் டீம் ஓர்க்... காயமடைந்த ஜடேஜாவுக்கு வாழைப்பழ தோலை உரித்து உதவிய நவ்தீப் சைனி - வீடியோ

வீடியோ காட்சி

வாழைப்பழம் சாப்பிட விரும்பிய ஜடேஜா, காயம் காரணமாக அதை உரிக்க முடியாத காரணத்தினால் அருகில் இருந்த நவ்தீப் சைனியிடம் கொடுத்து உரித்து கொடுக்க சொன்னார்

 • Share this:
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்காக நவ்தீப் சைனி வாழைப்பழ தோலை உரித்து கொடுத்து உதவும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்த போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக 2-வது இன்னிங்சில் பந்துவீசாத ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகி உள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் ரவீந்திர ஜடேஜா பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது.

  இதனிடையே இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து விளையாடி வந்தது. அஸ்வின் மற்றும் விஹாரி களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்த்து போராடி வந்தனர். இவர்களில் யாராவது அவுட்டாகினால் அடுத்த வீரராக இறங்கி ஆஸ்திரேலியா வேகத்தை எதிர்கொள்ள ஜடேஜா தயாராக இருந்தார். காயத்திலும் பேடு மற்றும் கிளவுஸ் உடன் ஜடேஜா விளையாட இருந்தார்.

  அப்போது வாழைப்பழம் சாப்பிட விரும்பிய ஜடேஜா அதை உரிக்க முடியாத காரணத்தினால் அருகில் இருந்த நவ்தீப் சைனியிடம் கொடுத்து உரித்து கொடுக்க சொன்னார். நவ்தீப் சைனியும் அந்த வாழைப்பழத்தை அவருக்கு உரித்து கொடுத்தார்.  சிட்னி மைதானத்தின் பால்கனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 37 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  Published by:Vijay R
  First published: