ஐபிஎல் போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம்?

Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 4:38 PM IST
ஐபிஎல் போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம்?
Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 4:38 PM IST
ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரலில் தொடங்க உள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடரில் விறுவிறுப்பை மேலும் அதிகப்படுத்த புதிய விதிமுறைகள் அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் செலவினங்களை குறைக்க இந்தாண்டு துவக்க விழாவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சர்வசேத போட்டிகளில் இரு அணிகள் மோதுவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பது வழக்கம். அதே போன்று ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளார்.


அந்த கடிதத்தில், “செலவை குறைக்க தொடக்க விழாவை ரத்து செய்த முடிவை வரவேற்கிறேன். அதே போல் ஐ.எஸ்.எல் கால்பந்து, புரோ கபடி லீக் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படுவதை போல் ஐபிஎல் போட்டி ஆரம்பாகும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும்“ என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...