ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டெஸ்ட் போட்டிகளில் நடராஜனின் யார்க்கர், ஸ்லோ பந்துகள் அவ்வளவாக எடுபடாது: பயிற்சியாளர் சந்தேகம்

டெஸ்ட் போட்டிகளில் நடராஜனின் யார்க்கர், ஸ்லோ பந்துகள் அவ்வளவாக எடுபடாது: பயிற்சியாளர் சந்தேகம்

டி.நடராஜன்.

டி.நடராஜன்.

அறிமுக வீச்சாளராக அணிக்குள் வரும்போது ஸ்விங் செய்யவில்லை எனில் ஸ்ட்ரைக் பவுலராக அவர் இருக்க முடியாது. எனவே இவரை ஸ்டாக் பவுலராக வீசச் செய்வதற்கே வாய்ப்பு அதிகம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐபிஎல் போட்டிகளில் யார்க்கர்களில் கலக்கி வார்னரின் கவன ஈர்ப்பைப் பெற்று பிறகு இந்திய அணித்தேர்வுக்குழுவின் கவன ஈர்ப்பைப் பெற்று டி20, ஒருநாள் போட்டிகளில் ஓரளவுக்கு சக்சஸ் ருசித்த டி.நடராஜன் தற்போது டெஸ்ட் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

  இந்நிலையில் டி.நடராஜனுக்கு பந்து வீச்சுப் பயிற்சியளித்த தமிழ்நாடு அணியின் தலைமைப் பயிற்சியாளர் திவாகர் வாசு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

  டி.நடராஜன் முயற்சிகள் எடுப்பவர், இந்திய பவுலிங் கோச் பாரத் அருணிடம் அவர் விரைவாகக் கற்றுக் கொள்வார். இடது கை வீச்சாளராக இயல்பாகவே அந்தக் கோணத்தில் வீசுவது அவருக்கு வீசுவது சுலபம். சிகப்புப் பந்தில் பந்தை வலது கை வீரருக்கு உள்ளே கொண்டு வரவும் அவரால் முடியும். ஆனால் இது அவருக்கு கற்றுக்கொள்ளும் படலாமாகும்.

  நான் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், அவர் அதில் சிறப்புறவும் வாழ்த்துகிறேன். சீரான லைனில் அவர் வீச வேண்டும். மேலும் அவர் கட்டர்களையும் வீச வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் எளிதானதல்ல, வேகம் குறைக்கப்பட்ட ஸ்லோயர் பந்துகள், யார்க்கர்கள் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவாக எடுபடாது.

  மேலும் அவர் அவ்வளவு வேகம் வீசுபவரும் அல்ல, இதனால் ஷார்ட் பிட்ச், பவுன்சர்களும் விக்கெட்டுகள் எடுக்க அவருக்கு உதவுவது கடினம். அவர் ஸ்விங் பவுலிங்கில் கவனம் செலுத்தி இடது கை வீச்சாளருக்கேயுரிய கோணத்தில் வீசுவதை அவர் வளர்த்துக் கொள்வதுதான் நல்லது.

  அறிமுக வீச்சாளராக அணிக்குள் வரும்போது ஸ்விங் செய்யவில்லை எனில் ஸ்ட்ரைக் பவுலராக அவர் இருக்க முடியாது. எனவே இவரை ஸ்டாக் பவுலராக வீசச் செய்வதற்கே வாய்ப்பு அதிகம், என்றார் திவாகர் வாசு.

  இடது கை வீச்சாளர் என்பதால் ஓவர் த விக்கெட்டில் இவர் வீசும் போது அவரது காலடித்தடங்கள் அஸ்வின் ஸ்பின்னுக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricketer natarajan, T natarajan