சிட்னியில் நாளை தொடங்கவிருக்கும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அணியில் இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட், தமிழக பவுலர் நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை.
மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். வேகப்பந்து வீச்சில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வருமாறு:
அஜிங்கிய ரஹானே கேப்டன், ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, மொகமது சிராஜ், நவ்தீப் சைனி.
நடராஜனும் சேர்க்கப்படவில்லை அதே போல் ஷர்துல் தாக்கூரும் பரிசீலிக்கப்படவில்லை, ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கும் செய்யக் கூடிய ஆல்ரவுண்ட் திறமைகள் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சீருடையில் நேற்று ட்விட்டர் பக்கத்தில் சவால்களுக்குத் தயார் என்று நடராஜன் புகைப்படத்துடன் பதிவிட்டார், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர் வாய்ப்புக்காக மேலும் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார்.