முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs ENG | ரசிகர்கள் உற்சாகம்; வந்தார் ‘யார்க்கர்’ நடராஜன்; டாஸ் வென்றது இங்கிலாந்து: இந்தியா பேட்டிங்

IND vs ENG | ரசிகர்கள் உற்சாகம்; வந்தார் ‘யார்க்கர்’ நடராஜன்; டாஸ் வென்றது இங்கிலாந்து: இந்தியா பேட்டிங்

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

வந்தார் நடராஜன். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3வது ஒருநாள், வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று மீண்டும் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3வது ஒருநாள், வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று மீண்டும் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ்வுக்கு பதிலாக தமிழக வீரர், யார்க்கர் நடராஜன் வந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இங்கிலாந்து அணியில் டாம் கரனுக்குப் பதில் மார்க் உட் அணியில் நுழைந்துள்ளார்.

இந்தப் போட்டியிலாவது ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா என்று பார்க்க வேண்டும், சேவாக் கேட்பது போல் விராட் கோலி ஏன் அவரை காக்கிறார் என்பதே கேள்வி. ஒருவேளை இங்கிலாந்து புரட்டி எடுத்து விட்டால்.. என்று அவரை காக்கிறாரா என்று தெரியவில்லை.

2 போட்டிகளாக இல்லாத யார்க்கர் நடராஜன் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார், திடீரென ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் போய் அவரைக் கொண்டு வந்து அவருக்கு நெருக்கடி அளிக்கிறார் விராட் கோலி.

Ind Vs Aus

தனக்கும் டாஸுக்கும் ராசி இல்லை என்கிறார் கோலி, ஆனால் அதை யார் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார் விராட் கோலி.

இது ஒரு நல்ல பிட்சாக தெரிகிறது எனவே முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்வதாக கூறினார் ஜோஸ் பட்லர்.

உண்மையில் அஸ்வினை ஒருநாள் போட்டிகளில் வைத்திருந்தால் அவர் நிச்சயம் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார். ஆனால் அவர் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்.

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோலி, ராகுல், பந்த், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, புவனேஷ் குமார், ஷர்துல் தாக்கூர், டி.நடராஜன், பிரசீத் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான், பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், ஆதில் ரஷீத், மார்க் உட், ரீஸ் டாப்லி.

First published:

Tags: Cricketer natarajan, India Vs England, T natarajan