ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நடராஜனுக்கு பவுன்சர்கள் போட்டு அச்சுறுத்திய போது யார் கேட்டார்கள்?- ஆண்டர்சன் - பும்ரா விவகாரத்தில் ஷர்துல் தாக்கூர் மனம் திறப்பு

நடராஜனுக்கு பவுன்சர்கள் போட்டு அச்சுறுத்திய போது யார் கேட்டார்கள்?- ஆண்டர்சன் - பும்ரா விவகாரத்தில் ஷர்துல் தாக்கூர் மனம் திறப்பு

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

ஜேம்ஸ் ஆண்டர்சன் சொல்லக் கூடாத வார்த்தை ஒன்றைப் பிரயோகித்தார் அதுதான் அனைவரையும் தட்டி எழுப்பியது என்று இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அந்த சம்பவம் பற்றி மனம் திறந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  லார்ட்ஸ் டெஸ்ட்டின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்களாக வீசினார் ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் சொல்லக் கூடாத வார்த்தை ஒன்றைப் பிரயோகித்தார் அதுதான் அனைவரையும் தட்டி எழுப்பியது என்று இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அந்த சம்பவம் பற்றி மனம் திறந்தார்.

  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் சவால்கள் பொறிபறந்தன, ஆஸ்திரேலியா ஆடுவது போல் கோலி படை எதிரணியை கதிகலங்கச்  செய்தனர், பல வார்த்தை மோதல்கள், கிண்டல்கள், கேலிகள் என்று இருதரப்புமே டெஸ்ட் போட்டியை வண்ணமயமாக்கினர். இதில் லார்ட்ஸ் டெஸ்ட் சம்பவத்தை விவரித்த போது ஷர்துல் தாக்கூர், ஆஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட்டே ஆடியிருக்காத நடராஜனுக்கு கமின்ஸ், ஸ்டார்க் என்று அனைவரும் பவுன்சர்களாக வீசித்தள்ளியதை யாராவது விமர்சித்தார்களா என்று கேட்டார்.

  இது தொடர்பாக ஷர்துல் தாக்கூர் கூறியதாவது: ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தாக்குதல் பவுலிங் செய்தோம், லார்ட்ஸ் டெஸ்ட் விவகாரம் ஓவல் டெஸ்ட் வரை வந்தது. ஆண்டர்சன் பும்ராவை நோக்கி சொல்லக்கூடாத வார்த்தை ஒன்றைக் கூறி வசைபாடியிருந்தார் என்று எனக்கு கூறினர். பும்ராவை அசிங்கப்படுத்திவிட்டனர் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

  அந்த வார்த்தைகள் என்னவென்பதை பப்ளிக்காக சொல்ல முடியாது. அதன் பிறகுதான் நாங்கள் ஆவேசமடைந்தோம். நாம் வெளிநாடுகளில் சென்று ஆடும் போது நம் அணியின் டெய்ல் எண்டர்கள் ஏகப்பட்ட பவுன்சர்களை எதிர்கொண்டுள்ளனர். நடராஜனுக்கு பவுன்சர் மழையை ஸ்டார்க்கும், கமின்சும் பொழிந்தனர். ஆனால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் முதல் தர கிரிக்கெட் கூட ஆடாத நடராஜனுக்குத்தான் அவர்கள் வீசுகிறார்கள் என்று, யார் இதை தட்டிக் கேட்டார்கள்?

  Also Read: கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் - விராத் கோலி அறிவிப்பு!

  இப்படியிருக்கும் போது நாம் மட்டும் ஏன் எதிரணி டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களை வீசக்கூடாது?  ஏன், ‘பாடிலைன்’ போடக்கூடாது. ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பந்து வீசுவதில்லை நாங்கள், வெற்றி பெறுவதற்காக ஆடுகிறோம்.

  இவ்வாறு கூறினார் ஷர்துல் தாக்கூர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India Vs England, Shardul thakur, T natarajan