பிரிஸ்பன் டெஸ்ட்டில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்: முதல் ஒவரிலேயே வார்னர் காலி; ஆஸ்திரேலியா 65/2

டி.நடராஜன் களம் கண்டார். 300வது டெஸ்ட் வீரர்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

 • Share this:
  பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

  இந்திய அணியில் யார்க்கர் நடராஜன், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளனர். பும்ரா, அஸ்வின், இல்லை, ஷர்துல் தாக்கூர் வந்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா மொத்தம் 19 வீரர்களை இந்தத் தொடரில் பயன்படுத்தியுள்ளது. 1961-62க்குப் பிறகு அதிக வீரர்களை ஒரு டெஸ்ட் தொடரில் பயன்படுத்திய விதத்திலும் ஒரு சாதனை புரிந்துள்ளது இந்திய அணி.

  அனுபவமற்ற பந்து வீச்சை வைத்துக் கொண்டு முதல் செஷனில் வார்னர் (1), மார்கஸ் ஹாரிஸ் (5) ஆட்டமிழந்தனர். வார்னர் முதல் ஓவரிலேயே சிராஜ் பந்தில் வெளியேறினார். ஆஃப் ஸ்டம்பில் வார்னர் உடலுக்குக் குறுக்காகச் சென்ற பந்துக்கு நிச்சயமற்ற விதத்தில் ஆடினார் வார்னர். எட்ஜ் ஆனது ரோஹித் சர்மா அற்புதமாக கேட்சை எடுத்தார்.

  மார்கஸ் ஹாரிஸ் 23 பந்துகள் ஆடி 5 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்குர் வீசிய முதல் பந்தில் லெக் திசையில் கேட்ச் ஆனார். அது ஒரு சாதாரண வார்ம்-அப் பந்து, அதை பிளிக் செய்கிறேன் என்று வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் ஆனார்.

  முதல் ஸ்பெல்லில் நடராஜன் நல்ல லைன் மற்றும் லெந்தில் கட்டுக்கோப்புடன் வீசினார், ஆனால் ஒரு பந்து மட்டுமே 136 கிமீ வேகம் சென்றது, மற்றபடி 132தான் அதிகபட்ச வேகம், ஆனால் இவரிடம் கட்டுக்கோப்பாக வீசும் திறமை உள்ளது. 6 ஓவர் 1 மெய்டன் 8 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இன்னும் அவர் பந்தில் பவுண்டரி அடிக்கப்படவில்லை.

  ஸ்மித், லபுஷேன் கூட்டணி 17/2 என்பதிலிருந்து 65/2 என்று கொண்டு சென்றுள்ளனர், வாஷிங்டன் சுந்தர் தான் வீசிய முதல் 3 ஓவர்களையும் மெய்டன்களாக வீசியுள்ளார்.
  லபுஷேன் 82 பந்துகள் ஆடி 19 ரன்களுடனும், ஸ்மித் 5 பவுண்டரிகளுடன் 55 பந்துகளில் 30 ரன்கள் என்று ஆக்ரோஷமாக ஆடிவருகிறார்.

  இனி தான் இந்திய பவுலர்களுக்கு கடினமான காலக்கட்டம் உள்ளது, அனுபவமற்ற பவுலிங் எப்படி ஆஸி.யைக் கட்டுப்படுத்தும் என்பதில்தான் இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் தெரியவரும்.
  Published by:Muthukumar
  First published: