அறிமுக டெஸ்ட்டில் அசத்திய நடராஜன்: வேட், லபுஷேனை வெளியேற்றினார்- கைகொடுத்த ஷார்ட் பிட்ச் பந்துகள்

2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், பிரிஸ்பன் டெஸ்ட்

ஆஸ்திரேலியா தற்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. பெய்ன் 34 ரன்களுடனும் கேமரான் கிரீன் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று இன்னமும் 4 ஓவர்களே உள்ளன.

  • Share this:
பிரிஸ்பேனில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழக வீரர் யார்க்கர் நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய கையோடு ரஹானேவினால் கேட்ச் விடப்பட்ட லபுஷேன் விக்கெட்டையும் சாய்த்தார்.

பவுண்டரிகள் கொடுக்காமல் மிகவும் சிக்கனமாக முதல் ஸ்பெல்லை வீசிய நடராஜன் தொடர்ந்து சிக்கனமாக வீசினார். இன்னொரு தமிழக அறிமுக டெஸ்ட் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஸ்மித்தை நிறுத்தி வைத்து வீழ்த்தும் போது ஸ்கோர் 87/3 என்று இருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த வேட் (45), லபுஷேன் (108), இருவரும் சேர்ந்து 113 ரன்கள் சேர்த்தனர். இடையில் சைனி தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பந்துவீசாமல் பாதியிலேயே வெளியேறினார். இதனால் காயத்தால் மேலும் ஒரு வீரர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுமை நடராஜன் மீது விழுந்தது, நடராஜனும் கடினமான உழைத்து வீசினார், அவரை எளிதில் ரன்கள் எடுக்க முடியவில்லை, இந்நிலையில்தான் அவர் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை வீச அதை புல் செய்ய போதிய ரூம் கிடைக்காமல் மேத்யூ வேட் எதையோ ஆட அது மிட் ஆனில் ஷர்துல் தாக்குரிடம் கேட்ச் ஆனது. நல்லவேளையாக மிட் ஆஃபிலிருந்து ஷா வேறு அந்தக் கேட்சுக்குப்போனார், தொடக்கத்தில் நடராஜனும் கேட்சுக்குப் போனார், ஆனால் தாக்குர் சேதமின்றி பிடித்தார்.

இது நடந்து முடிந்து ஒரு ஓவர் சென்ற பிறகு நடராஜன் மீண்டும் தனது அடுத்த ஓவரில் லபுஷேனை வீழ்த்தினார், இம்முறையும் ஷார்ட் பிட்ச் பந்துதான். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீழ்த்தினார், லபுஷேன் அதை வாரிக்கொண்டு அடிக்கப் போக மட்டையை சற்று முன்னேயே மடக்க பந்து டாப் எட்ஜ் ஆகி ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனது.

தற்போது 20வது ஓவரை வீசி வரும் நடராஜன் 2 மெய்டன்களுடன் 58 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா தற்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. பெய்ன் 34 ரன்களுடனும் கேமரான் கிரீன் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று இன்னமும் 4 ஓவர்களே உள்ளன.
Published by:Muthukumar
First published: