நடராஜன் பவுலிங்கை டிவியில் பார்த்து மகிழ்ந்த அவரது தாய்..!

நடராஜன் பவுலிங்கை டிவியில் பார்த்து மகிழ்ந்த அவரது தாய்..!

நடராஜன் பவுலிங்கை டிவியில் பார்த்த உறவினர்கள்

India vs Australia | இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தமிழக வீரர் நடராஜனின் அபாரமான பந்துவீச்சை அவரது தாயார் டிவியில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் துல்லியமான யார்க்கர் மற்றும் தரமான பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் டி20 தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி 2 ஒரு நாள் போட்டிகள் தோல்வியடைந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து விமர்சனம் எழுந்தது.

இதனால் 3-வது ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக விளையாடிய நடராஜனின் ஆட்டத்தை அவரது தாய் சந்தா மற்றும் அவரது உறவினர்கள் டிவியில் பார்த்து மகிழ்ந்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: