ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் இறுதி போட்டியை நடத்திய நரேந்திர மோடி மைதானத்துக்கு கின்னஸ் சாதனை விருது

ஐபிஎல் இறுதி போட்டியை நடத்திய நரேந்திர மோடி மைதானத்துக்கு கின்னஸ் சாதனை விருது

கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் ஜெய் ஷாவிடம் வழங்கப்பட்டது

கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் ஜெய் ஷாவிடம் வழங்கப்பட்டது

கின்ன்ஸ் சாதனைக்கான சான்றிதழை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கின்ன்ஸ் நிர்வாகம் வழங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் இறுதி போட்டியில் அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்ததை கின்னஸ் உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் இந்த போட்டியை டி20 கிரிக்கெட் வரலாற்றில் மைதானத்தில் அதிக அளவில் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் மைதானத்தில் அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: மனைவிக்காக வீதிவீதியாக வாக்கு சேகரிக்கும் ரவீந்திர ஜடேஜா!

அதன்படி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து 566 பேர் நேரில் கண்டுகளித்தனர். கின்ன்ஸ் சாதனைக்கான சான்றிதழை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கின்ன்ஸ் நிர்வாகம் வழங்கியது.

First published:

Tags: BCCI, Guinness, Narendra Modi