‘வேட்டை தொடரும்’, விசில் போடு... ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிஎஸ்கே

சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.

Prabhu Venkat | news18
Updated: May 13, 2019, 1:10 PM IST
‘வேட்டை தொடரும்’, விசில் போடு... ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிஎஸ்கே
சிஎஸ்கே
Prabhu Venkat | news18
Updated: May 13, 2019, 1:10 PM IST
எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

12-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது, இந்நிலையில் நேற்று சென்னை மும்பை அணிகள் மோதிய இறுதிபோட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சனும், டூபிளிஸிஸும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த போது டூபிளிஸிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பதி ராயுடு, 2 ரன்களிலும் ஆட்டமிழக்க வாட்சன் அதிரடியாக விளையாடினார்.


கடைசி ஓவரில் 9 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் வாட்சன் 4-வது பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சென்னை அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாகூர் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் மலிங்கா.

இதையடுத்து சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.



சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும், எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எங்களுடைய வளர்ச்சிக்கு நீங்கள் தான் காரணம். இந்த வேட்டை தொடரும். விசில் போடு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...