ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நமிபியா அணியிடம் சரணடைந்த இலங்கை அணி: ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு இந்த நிலைமையா?

நமிபியா அணியிடம் சரணடைந்த இலங்கை அணி: ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு இந்த நிலைமையா?

நபிபியா அணி வெற்றி

நபிபியா அணி வெற்றி

நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலககோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internatio, IndiaAustraliaAustraliaAustraliaAustralia

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பையின் முதல் போட்டியில் இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா வெற்றி பெற்றுள்ளது.

    8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் துசன் சங்கா முதல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய நமிபியா அணி நிதான ஆட்டத்தையே ஆடியது.

    அந்த அணியில் ஜான் ஃப்ரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்களும் இறுதியில் அதிரடியாக ஆடிய ஸ்மிட் 31 ரன்கள் எடுத்ததால் நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதுசன் 2 விக்கெட்டை இழந்தனர்.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நமிபியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    இதையும் படிங்க: 8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

    இலங்கை அணி இறுதியில் 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவியது. இதனால் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Australia, Srilanka, T20 World Cup