• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • என் ஓடும் நாட்கள் முடிந்து விட்டன- ஷோயப் அக்தர் மெசேஜ்- ரசிகர்கள் கவலை

என் ஓடும் நாட்கள் முடிந்து விட்டன- ஷோயப் அக்தர் மெசேஜ்- ரசிகர்கள் கவலை

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் மூட்டு அறுவைச் சிகிச்சை குறித்து ட்விட் செய்துள்ளார்.

  • Share this:
    ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் ஓடும் நாட்கள் முடிந்து விட்டன என்று மெசேஜ் போட்டதையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.

    காரணம் இதுதான்: விரைவில் ஆஸ்திரேலியாவில் அவருக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முழங்கால் மறுக்கட்டமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மீண்டும் அவர் முழங்காலில் கத்தி இறங்கப்போகிறது.

    இந்நிலையில் கடந்த ஞாயிறன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “என் ஓடும் நாட்கள் முடிந்துவிட்டன. ஆஸ்திரேலியாவில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கிறேன். மெல்போர்னில் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

    இவரது இந்த திடீர் மெசேஜினால் கவலையடைந்த இவரைப் பின் தொடரும் ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். அக்தர் 2011-ல் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார், அதில் அவர் பல்வேறு போட்டிகள் குறித்த மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறார்.







    ஷோயப் அக்தர் 46 டெஸ்ட், 163 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 179 மற்றும் 247 விக்கெட்டுகளை முறையே எடுத்துள்ளார். 15 டி20 சர்வதேசப் போட்டிகளில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2011-ல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டியே இவரது கடைசி போட்டி. உலகின் அதிவேக பந்தை வீசிய ரெக்கார்டை அக்தர் வைத்துள்ளார். மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் ஒரு பந்தை அவர் வீசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: