• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் - சிஎஸ்கே பாராட்டு விழாவில் தோனி

என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் - சிஎஸ்கே பாராட்டு விழாவில் தோனி

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் என்று சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    முதல்வருடன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதராத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலாநிதி வீரசாமி எம்.பி உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனி, முன்னாள் வீரர் கபில்தேவ், சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது சிஎஸ்கே வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 7-ம் நெம்பர் பொறித்த ஜெர்சியை தோனி வழங்கினார்.

    இதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் உரையாற்றினார். அதில், 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை மீதான உறவு தொடங்கியது. சென்னையில் தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து உள்ளனர். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் என்றுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: