Home /News /sports /

‘எங்கள்கோலி, எங்கள் புஜாரா’- முகமது ரிஸ்வானின் சகோதரத்துவம்

‘எங்கள்கோலி, எங்கள் புஜாரா’- முகமது ரிஸ்வானின் சகோதரத்துவம்

ரிஸ்வான் - புஜாரா

ரிஸ்வான் - புஜாரா

டி20 உலகக்கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்திய போது ரிஸ்வானை கட்டிப்பிடித்துக் கொண்டார் விராட் கோலி. இந்தப் புகைப்படம் வைரலானது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து கவுண்ட்டியில் புஜாராவும் ரிஸ்வானும் சேர்ந்து ஆடியுள்ளனர். இவையெல்லாம் ரிஸ்வானை பெரிய மெய்சிலிர்ப்புக்கு இட்டுச் சென்றுள்ளது.

மேலும் படிக்கவும் ...

    இந்நிலையில் சமீபத்தில் முகமது ரிஸ்வான், இந்திய வீரர்கள் கோலியையும் புஜாராவையும் எங்கள் கோலி, எங்கள் புஜாரா என்று அழைத்ததோடு எங்கள் ஸ்மித், எங்கள் ஜோ ரூட் என்று கிரிக்கெட் சகோதரத்துவத்தை வலியுறுத்துமாறு பேசி உலகம் நெடுகிலும் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ரிஸ்வான்.

    “நான் அப்போது விராட் கோலி பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில் பார்த்த மனிதருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது, அனைவரும் அவர் ஆக்ரோஷமானவர், யாருடனும் ஒட்டமாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள், ஆனால் மேட்சுக்கு முன்பும் பின்பும் அவரை பார்த்த போது நேருக்கு மாறாக இருந்தார்.

    நான் ஏன் ‘எங்கள் விராட் கோலி’ என்கிறேன் என்றால் நாங்களெல்லாம் ஒரே குடும்பம் போன்றவர்கள். களத்தில் வேறு, அங்கு யாரும் ஸ்டார் கிடையாது. களத்தில் சகோதரத்துவம் இருக்காது, ஆனால் போட்டி முடிந்தவுடன் வெளியே கோலியை நாங்கள் சந்தித்தோம், தோனியை சந்திதோம், அத்தனை அன்பு பெருகியது.

    கவுண்ட்டி கிரிக்கெட்டில் புஜாரா என்னுடன் தான் இருந்தார், ஆனால் அவரும் நானும் எத்தனை அன்புடன் பழகினோம் தெரியுமா? நான் அவரை அடிக்கடி வெளியே போகக் கூப்பிடுவேன். அவர் சிரித்துக் கொண்டே இருப்பார், இதேதான் விராட் கோலியும். முதல் முறையாக இவரைப் பார்த்த போதும் எத்தனை பாசம், நேசம்...என்று நெகிழ்ந்து போய் விட்டார் ரிஸ்வான்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, India vs Pakistan, Virat Kohli

    அடுத்த செய்தி