Home /News /sports /

Mohammed Shami| என் அப்பா என்னை சைக்கிளிலேயே 30 கிமீ பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்- ஷமி உருக்கம்

Mohammed Shami| என் அப்பா என்னை சைக்கிளிலேயே 30 கிமீ பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்- ஷமி உருக்கம்

தன் தந்தையை நினைவு கூரும் மொகமட் ஷமி

தன் தந்தையை நினைவு கூரும் மொகமட் ஷமி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்திய மொகமட் ஷமி, தன் வளர்ச்சியில் தன் தந்தையின் உழைப்பை உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்திய மொகமட் ஷமி, தன் வளர்ச்சியில் தன் தந்தையின் உழைப்பை உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மொகமட் ஷமி, “நான் இன்று இப்படி உங்கள் முன்னால் இருப்பதற்குக் காரணம் என் தந்தைதான். நான் இருந்தது ஒரு கிராமத்தில். அங்கு கிரிக்கெட் பயிற்சிக்கான வசதிகள் கிடையாது, இன்று கூட பெரிய வசதிகள் அங்கு இல்லை.

    பயிற்சி முகாமுக்கு என் தந்தை என்னை 30 கிமீ சைக்கிளிலேயே கூட்டிச் செல்வார். இன்றும் எனக்கு அவர் பட்ட கஷ்டம் நினைவில் இருக்கிறது. அந்த நாட்களில், அந்தக் காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து கிரிக்கெட் வீரனாக என் மீது முதலீடு செய்த அவர்களை என்றென்றைக்கும் மறக்க மாட்டேன்.

    இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்பதே கனவு, அதுவும் நாம் டிவியில் பார்த்து மகிழ்ந்த வீரர்களுடன் ஆட வேண்டும். ஒருவர் என்ன சாதிக்க முடியும் என்பதை கனவு காண்பது கடினம். ஏனெனில் படிமுறையில் மேலேறி வந்து அடையாளம் பதிப்பது கடினமான காரியம்.

    நாம் என்ன செய்ய முடியும்? கடின உழைப்பை செலுத்த முடியும், கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. டெஸ்ட் மேட்ச் பவுலிங் என்பது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல. டெஸ்ட் பவுலராக வேண்டுமெனில் நாம் வீசும் லெந்த்தை சரியாக அறிந்திருக்க வேண்டும். என்ன மாதிரியான பிட்ச், சூழ்நிலையில் ஆடுகிறோம் என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும்” என்றார் ஷமி.

    நேற்று 3ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 197 ரன்களுக்கு மடிந்தது, இந்திய அணியில் முகமது ஷமி தன் 55வது டெஸ்ட்டில் 200 விக்கெட்டுகளைச் சாய்த்து மைல்கல்லை எட்டினார். ஷமி 16 ஓவர் 5 மெய்டன் 44 ரன் 5 விக்கெட். பிரமாதமாக வீசினார்.

    Also Read: வேகப்பந்து வீச்சு எழுச்சிக்கு எங்களின் உழைப்பே காரணம்; பொடி வைத்துப் பேசிய ஷமி- அப்ப சாஸ்திரி, பாரத் அருண் இல்லையா?

    கபில்தேவ் (434), இஷாந்த் சர்மா(311), ஜாகீர் கான் (311), ஸ்ரீநாத் (236), வரிசையில் 5வது இந்திய வேகப்பந்து வீச்சாளராக 200 விக்கெட் மைல்கல்லை எட்டினார் ஷமி. டெஸ்ட் அரங்கில் 6வதுமுறையாக இன்னிங்ஸில் 5 விக்கெட் அல்லது அதற்கும் கூடுதலான விக்கெட்டை வீழ்த்தியும் மைல்கல் எட்டினார் ஷமி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: First test cricket match, India vs South Africa

    அடுத்த செய்தி