முகப்பு /செய்தி /விளையாட்டு / நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட... தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட... தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

மகேந்திரசிங் தோனி

மகேந்திரசிங் தோனி

MS Dhoni | கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த தோனி, நீ பத்தாம் வகுப்பு கூட பாஸ் செய்ய மாட்ட என்று தன் தந்தை கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். கிரிக்கெட்டில் தோனியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தாலும் ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரிலும் தோனியின் கேப்டன்ஷிப் வெற்றி முகமாகவே உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் வர உள்ள ஐபிஎல் தொடரில் வலிமை உடன் திரும்பி வருவோம் என்று ரசிகர்களுக்கு தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி மாணவர்களிடம் தனது பள்ளி பருவம் குறித்து பகிர்ந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ள. அதில், நான் படிப்பில் சராசரி மாணவன் தான். 7-ம் வகுப்பு முதல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததால் எனது வருகைபதிவு குறைவானது. மற்றப்படி நான் நல்ல மாணவன். பத்தாம் வகுப்பில் 66 சதவீதமும் 12-ம் வகுப்பில் 57 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன்.

Also Read : ஓசூரில் தோனியின் சொந்த ஸ்கூல்! 4 ஏக்கரில் கிரிக்கெட் கிரவுண்ட் ஓபன் செய்த தல!

நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மிகவும் சந்தோஷமடைந்தேன். ஏனென்றால் என் அப்பா என்னை பத்தாம் வகுப்பு கூட பாஸ் செய்ய மாட்ட என்று சொல்லி வந்தார். அதனால் நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த உடன் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றார். இந்த வீடியோ கிளிப் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

First published:

Tags: Cricket, MS Dhoni