IPL 2022: என்னைக் கருவிலேயே அழிக்க நினைத்தார் என் தந்தை- மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மென் போவெல் வேதனை
IPL 2022: என்னைக் கருவிலேயே அழிக்க நினைத்தார் என் தந்தை- மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மென் போவெல் வேதனை
போவெல்.
தாய் வயிற்றில் தான் இருந்தபோது தந்தை கருவை கலைக்க சொன்னதாக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டரும் தற்போது டெல்லி கேப்பிடல்ஸுக்கு சிறப்பாக ஆடி வரும் வீரருமான ரோவ்மென் போவெல் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
தாய் வயிற்றில் தான் இருந்தபோது தந்தை கருவை கலைக்க சொன்னதாக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டரும் தற்போது டெல்லி கேப்பிடல்ஸுக்கு சிறப்பாக ஆடி வரும் வீரருமான ரோவ்மென் போவெல் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
15-வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது.
நேற்று சன் ரைசர்ஸ் அணியை 21 ரன்களில் வீழ்த்தியதில் பெரிய அளவில் பங்களிப்பு செய்தவர்கள் டேவிட் வார்னர் மற்றும் ரோவ்மென் போவெல் ஆகியோர்களாவர். இதில் வார்னர் 92 ரன்களை விளாச ரோவ்மென் போவெல் 67 ரன்களை 33 பந்துகளில் அடிக்க இருவரும் சேர்ந்து 122 ரன்களை 11 ஓவர்களில் விளாசி ஸ்கோரை 207-க்கு உயர்த்த சன் ரைசர்ஸ் அணி 186 ரன்களில் முடிந்தது.
இந்நிலையில் ரோவ்மென் போவெல் இந்தப் போட்டிக்கு முன்பு ஊடகம் ஒன்றில் கூறும்போது, “நான் இதுநாள்வரை எனது தந்தையை நேரில் பார்த்தது இல்லை. என் தாய் என்னை வயிற்றில் சுமந்திருந்தபோது, கருவை கலைக்குமாறு எனது தந்தை என் தாயை வற்புறுத்தினார். ஆனால், என் தாய் ஜோன் அதற்கு உடன்படாமல் என்னைப் பெற்றெடுத்தார்.
ஜமைக்காவில் உள்ள பழைய துறைமுகத்துக்கு அருகே பானிஸ்டர் மாவட்டத்தில் 2 அறைகள் மட்டுமே இருக்கும் சிறிய வீட்டில்தான் நான் பிறந்தேன். என்னையும், என் சகோதரியையும் என் தாய் ஜோன்தான் சிரமத்துடன் வளர்த்தார்.
என் தாயைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் போதாது. நான் எப்போதெல்லாம் மனம் தளர்ந்து இருப்பேனோ அப்போது, நான் மனதில் நினைத்துக் கொள்வது எல்லாம் ஒன்று மட்டும் தான் “நான் எனக்காக எதையும் செய்யவில்லை. நான் என் தாய்க்காகவும், சகோதரிக்காகவும் செய்கிறேன் என நினைத்து கொள்வேன்” என்று கூறினார் ரோவ்மென் போவெல்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.