Home /News /sports /

ஆம் என் மகள் இந்திய கொடியைத்தான் பிடித்துக் கொண்டிருந்தாள்- ஷாகித் அஃப்ரிடி

ஆம் என் மகள் இந்திய கொடியைத்தான் பிடித்துக் கொண்டிருந்தாள்- ஷாகித் அஃப்ரிடி

ஷாஹித் அஃப்ரிடி மகள், ஷாஹித் அஃப்ரிடி

ஷாஹித் அஃப்ரிடி மகள், ஷாஹித் அஃப்ரிடி

பாகிஸ்தான் தேசியக் கொடி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், மற்றெல்லோரும் இந்திய ரசிகர்கள்தான், எனவே என் மகள் இந்தியக் கொடியை பிடித்துக் கொண்டு அதை ஆட்டினாள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiapakistanpakistanpakistan
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை சூப்பர்-4 போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடியின் மகள் இந்தியக் கொடியைப் பிடித்துக் கொண்டிருந்த விஷயம் வைரலாகி வருகிறது.

இதனை தன் மனைவி தன்னிடம் உறுதி செய்ததாக லைவ் ஷோ ஒன்றில் ஷாகித் அஃப்ரீடியே கூறினார். இதுதொடர்பாக ஷாகித் அஃப்ரீடி கூறும்போது,  “அன்றைய தினம் (செப்.4) இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் 10% மட்டுமே பாகிஸ்தான் ரசிகர்கள் இருந்ததாகவும் இதனால் பாகிஸ்தான் தேசியக் கொடி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், மற்ற எல்லோரும் இந்திய ரசிகர்கள்தான், எனவே என் மகள் இந்தியக் கொடியை பிடித்துக் கொண்டு அதை ஆட்டினாள், எனக்கு இதன் வீடியோ வந்தது, ஆனால் இதை வெளியிடுவதா வேண்டாமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” என்றார்.

லீக் ஸ்டேஜில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் சூப்பர்-4 சுற்றில் பழி தீர்த்தது. ரிஸ்வான் இந்த முறையும் 51 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். மொகமது நவாஸ் 20 பந்துகளி 42 விளாசினார். இந்திய அணியினால் 181 ரன்களை வெற்றிகரமாக தடுக்க முடியவில்லை. விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தாலும் முக்கியத் தருணங்களில் இவரால் பிக் ஹிட்டிங் செய்ய முடியவில்லை இதனால் ஸ்கோர் 191-195 போயிருக்க வேண்டியது 181 ஆக குறைந்தது.

இதையும் வாசிக்க: 2021 ஐபிஎல் இறுதியில் சிஎஸ்கே சாம்பியன் ஆனது நினைவில் இருந்தது - இலங்கை கேப்டன் தசுன் ஷனகா

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியச் சாம்பியன்கள் ஆயினர். இந்நிலையில் ஷாகித் அஃப்ரீடி தன் மகள் இந்தியக் கொடியைத்தான் பிடித்துக் கொண்டு ஆட்டினாள் என்று ஷாகித் அஃப்ரீடி கூறியுள்ளார், இதை பாகிஸ்தானிய ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றி தெரியவில்லை.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Asia cup, Asia cup cricket, Pakistan Cricketer, Shahid Afridi

அடுத்த செய்தி