Video | மகிழ்ச்சியான தருணத்தில் உருக்கமான வீடியோ வெளியிட்ட சச்சின்...!

சச்சின் டெண்டுல்கர் “என் கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த தருணம்'' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vijay R | news18
Updated: April 2, 2019, 9:14 PM IST
Video | மகிழ்ச்சியான தருணத்தில் உருக்கமான வீடியோ வெளியிட்ட சச்சின்...!
சச்சின் டெண்டுல்கர்
Vijay R | news18
Updated: April 2, 2019, 9:14 PM IST
2011ம் ஆண்டின் உலகக்கோப்பை வென்றதன் 8 வது ஆண்டான இன்று சச்சின் டெண்டுல்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது.


Loading...
கிரிக்கெட் ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடி போதும் 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் - வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி


உலகக்கோப்பை வெல்லும் இந்திய அணியில் நான் இருக்க வேண்டும் என்பதே சச்சின் டெண்டுல்கரின் நெடுநாள் கனவாக இருந்தது. ஏப்ரல் 2, 2011 சச்சினின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

இன்றைய மகிழ்ச்சியான தருணத்தில் சச்சின் டெண்டுல்கர் “என் கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த தருணம்'' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது கிரிக்கெட் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று. உலகக்கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் நானும் இருந்தேன் என்பது சந்தோஷமாக உள்ளது.

விரைவில் உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 தொடங்க உள்ளது. இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் வரும் உலகக்கோப்பையை நாம் வெல்ல வேண்டும். நீங்கள் இந்திய அணியின் ஜெர்சியை கவனித்து இருந்தால் பிசிசிஐ லோகோவிற்கு மேல் 3 ஸ்டார்ஸ் இடம் பெற்றிருக்கும். அந்த ஸ்டார்ஸ் நாம் எத்தனை முறை உலகக்கோப்பையை வென்று இருக்கிறோம் என்பதை குறிக்கும்.



இதுவரை 3 ஸ்டார்ஸ் நமது ஜெர்சியில் இடம் பெற்றுள்ளது. அதனை நான்கு ஸ்டார்ஸாக மாற்ற வேண்டும். அதுவே எனது ஆசை என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.



இந்திய அணி இதுவரை 1983, 2011 உலகக்கோப்பையும், 2007 டி20 உலகக்கோப்பையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

 
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்









First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626