ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையை பாராட்ட சற்றே தாமதமாக்கி விட்டார் டேல் ஸ்டெய்ன், உடனே நெட்டிசன்கள் ஈவு இரக்கமின்றி அவர் மீது பாய்ந்தனர், இதற்கு வேதனையுடன் பதில் அளித்த டேல் ஸ்டெய்ன், ‘என் தாத்தா இறந்து விட்டார், எனவே அவருடனும் என் குடும்பத்துடனும் இருந்து விட்டேன்’ என்று பதிலளித்துள்ளனர்.
இந்த நெட்டிசன்களின் அராஜகம் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது. என்னவோ லைஃபில் இவர்கள் பெரிய யோக்கியர்கள், நல்லவர்கள் போலும் பிரபலங்கள், மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் போலும் நினைத்துக் கொண்டு எல்லாரையும் தராதரம் இல்லாமல் ட்ரால் செய்வது, விமர்சிப்பது என்று கிளம்பி விடுகின்றனர், தன்னுடைய தகுதி தராதரம் என்னவென்பதை இவர்கள் யோசிப்பதில்லை என்று சில உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதாவது ஒரு பிரபலத்தை கேலி, கிண்டல், விமர்சனம் செய்வதன் மூலம் தன்னிடம் இல்லாத ஒன்றை இட்டு நிரப்பிக் கொள்கின்றனர். இன்னொன்று ஏதோ பிரபலங்களின் திறமையும் தன் திறமையும் ஒன்றுதான் என்று தராசுத் தட்டில் தன்னையும் பிரபலங்களையும் போலித்தனமாக சமப்படுத்திக் கொள்வதும்தான் இதன் உளவியல் என்கின்றனர் சோஷியல் மீடியா உளவியல் நிபுணர்கள்.
நேதன் லயன் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியதை ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட மற்றவர்கள் விரைவில் பாராட்டி விட்டனராம், டேல் ஸ்டெய்ன் தாமதமாக பாராட்டி விட்டாராம். உடனே ஏன் லேட், பாராட்ட மனமில்லையா என்றெல்லாம் அவரை பிடித்து டார்ச்சர் செய்திருக்கின்றனர். இதற்கு பதில் அளித்த டேல் ஸ்டெய்ன், “நான் மன்னிப்புக் கேட்கிறேன், என் தாத்தா இறந்து விட்டார், அதனால் அவருடனும் என் குடும்பத்துடனும் இருந்தேன். நான் தாமதமாக வாழ்த்தினேன் என்று முட்டாள்தனமான கிண்டல், கேலி, விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dale steyn, Social media, Twitter