வங்கதேச அணியின் மூத்த வீரரான முஷ்ப்பீர் ரஹீம் பேட்டிங் செய்த போது, பந்தை ஸ்டெம்பில் படாமல் தடுக்க செய்த முயற்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஜிம்பாவே அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. அதில் முஷ்ப்பீர் ரஹீம் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஜிம்பாவே அணியின் வேகப்பந்துவீச்சாளர் பந்தை எதிர்கொண்டார்.
அப்போது பந்தை தடுத்து விளையாட முயற்சித்த போது பந்து அவரை தாண்டி பவுன்ஸ் ஆகி ஸ்டெம்பை நோக்கி சென்றது. அப்போது பந்து ஸ்டெம்பில் படுவதைத் தடுக்கும் விதமாக ஸ்டெம்பை அணைப்பது போல் நின்று கொண்டார். அதனால் பவுன்ஸ் ஆன பந்து மீண்டும் பிட்சாகி அவரின் தொடையில் பட்டு நின்றுவிட்டது. இதனால்அவர் அவுட்டாகும் வாய்ப்பு தட்டிச் சென்றது.
அவர் பந்தைத் தடுக்கும் முயற்சிகள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்ததால் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. முஷ்ப்பீர் ரஹீம் 5 வது விக்கெட்டுக்கு கேப்டன் மோமினுல் ஹக் உடன் இணைந்து 222 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தார்.
Also Read : நட்சத்திர ஹோட்டலில் நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்... வைரலாகும் டிக்-டாக் வீடியோ
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்தது. முஷ்ப்பீர் ரஹீம் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் குவித்தார். இது அவருக்கு மூன்றாவது இரட்டைச் சதமாகும்.
இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில், விக்கெட் கீப்பர் ஒருவர் இரண்டு முறை இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் முஷ்ப்பீர் ரஹீம் தற்போது சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை முஷ்ப்பீர் ரஹீமுக்கு வழங்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.