கிரிக்கெட் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்.. புகாரில் சிக்கிய மூத்த இந்திய வீரர்

எனக்கும் என்னை சேர்ந்த குடும்பத்தினருக்கும் ஏதேனும் நேர்ந்தால் அதற்கு முனாப் படேல் முழு பொறுப்பு என்று காவல் துறையில் கூறியுள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 6, 2019, 5:21 PM IST
கிரிக்கெட் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்.. புகாரில் சிக்கிய மூத்த இந்திய வீரர்
முனாப் படேல்
Vijay R | news18-tamil
Updated: September 6, 2019, 5:21 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், 2011 உலகக் கோப்பை வென்ற அணியில் பங்கேற்ற முனாப் பட்டேல் கொலை மிரட்டல் விடுப்பதாக வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல். தற்போது இவர் குஜராத் மாநிலம், வடோதரா கிரிக்கெட் சங்க ஆலோசகராக இருக்கிறார்.

இந்நிலையில் முனாப் படேல் கொலை மிரட்டல் விடுக்கிறார் என வடோதரா கிரிக்கெட் சங்கத் தலைவர் தேவேந்திர ஸ்ருதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகாரை முனாப் படேல் மறுத்துள்ளார்.


கிரிக்கெட் சங்கத்தில் ஊழலுக்கு எதிராக நான் குரல் எழுப்பி வருவதால் எனக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது. எனக்கும் என்னை சேர்ந்த குடும்பத்தினருக்கும் ஏதேனும் நேர்ந்தால் அதற்கு முனாப் படேல் முழு பொறுப்பு என்று காவல் துறையினரிடம்  தேவேந்திர ஸ்ருதி கூறியுள்ளார்.

முனாப் படேல்


இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள முனாப் படேல் “எந்தவித காரணமின்றி என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு தேர்வுகளில் பிரச்சனை உள்ளது. நான் அணியின் ஆலோசகராக மட்டுமே இருக்கிறேன். தேர்வுகளில் எனக்கு எந்த பங்குமில்லை. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றவை“ என்றுள்ளார்.

Loading...

இந்த புகார் தொடர்பாக வடோதரா காவல் ஆய்வாளர் கூறுகையில் “நாங்கள் ஸ்ருதியிடமிருந்து புகார் மட்டுமே பெற்றுள்ளோம். எப்.ஐ.ஆர் ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை“ என்றார்.

Also Watch

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...