போராடிய டிவில்லியர்ஸ்: இறுதி ஓவரில் தடுத்த மலிங்கா! பெங்களூவை வீழ்த்தியது மும்பை

விராட் கோலி, டி வில்லியர்ஸ், மும்பை அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். நிதானமாக ஆடிய கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

news18
Updated: March 29, 2019, 12:10 AM IST
போராடிய டிவில்லியர்ஸ்: இறுதி ஓவரில் தடுத்த மலிங்கா! பெங்களூவை வீழ்த்தியது மும்பை
டி வில்லியர்ஸ்
news18
Updated: March 29, 2019, 12:10 AM IST
பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி பட்டேல் மற்றும் மெயின் அலி களமிறங்கினர். பிரித்வி 31 ரன்களிலும், மொயின் அலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், மும்பை அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். நிதானமாக ஆடிய கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி


அடுத்தடுத்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹேட்ம்யெர், கோலின் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும், டி வில்லியர்ஸ் மறுபுறம் எதிரணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தார். 19 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 171 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஒரு ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா இறுதி ஓவரை வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவர் டூபே சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

அடுத்த இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. மலிங்கா வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார். எனவே, டிவில்லியர்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டிவில்லியர்ஸால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதி ஓவரில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி, 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே குவித்தது. எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை அணி, இரண்டாவது போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

Also see:
Loading...
First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...