சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 15-வது லீக் போட்டிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ்வென்ற ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 5 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
சுரேஷ் ரெய்னாவும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கேதர் ஜாதவ் மட்டும் 58 ரன்கள் குவித்தார். தோனி உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி முதல்முறை தோல்வியடைந்துள்ளது. நான்கு போட்டியை எதிர்கொண்ட மும்பை அணி, தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.