வரும் சீசனில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்கு ஆட மாட்டார் என்றும் கோவா அணிக்காக அவர் ஆடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் ‘ஆட்சேபணை இல்லை சான்றிதழ்’ கோரியுள்ளார்.
கோவா கிரிக்கெட் சங்க செயலர் விபுல் பத்கே இது தொடர்பாக இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் நாளேடுக்குக் கூறும்போது, “கோவாவுக்கு ஆடவேண்டும் என்று அர்ஜுன் கேட்டார். முதலில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் என்.ஓ.சி. தேவை என்றோம். அது அவருக்கு கிடைத்து விட்டது. அவரது ஃபிட்னெஸ், திறன் சோதனை நடைபெறும். இதற்கு முன்னரும் நிறைய பேர் கோவாவுக்கு ஆட விரும்பியுள்ளனர், அர்ஜுன் டெண்டுல்கரும் விரும்புகிறார், அவரை அணியில் எடுக்கும் முன்னர் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும்” என்றார்.
கடந்த சீசனில் மும்பை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் ஒரு போட்டியில் கூட அர்ஜுனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பிளேயிங் லெவனில் அவர் இன்னும் இடம்பெறவில்லை.
அதாவது கேம் டைம் வேண்டும், அது அர்ஜுன் டெண்டுல்கருக்கு இப்போது மிக அவசியம். கோவாவுக்கு சென்றால் அதிக போட்டிகளில் அவரால் ஆட முடியும், தன் கிரிக்கெட் வாழ்க்கையின் புதிய கட்டத்தில் அர்ஜுன் அடியெடுத்து வைத்துள்ளதாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் கம்பெனி தெரிவித்துள்ளது.
மும்பை அணிக்கு ஆடுவது மிக மிகக் கடினம், எனவே மும்பை அணிக்கு எதிராக ஆடி மும்பை வீரர்களை சாய்த்தால் விரைவில் இந்திய அணிக்கே கூட தேர்வாக முடியும். இதைப் பலரும் முன்பு செய்துள்ளனர். மும்பைக்கு ஆடுவது என்பது பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது போல மிக மிகக் கடினமான ஒன்று என்று பலரும் முன்னர் கூறியது கவனத்திற்குரியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Goa, Mumbai, Ranji Trophy, Sachin tendulkar