#CSKvMI பந்து வீச்சில் அசத்திய சென்னை வீரர்கள்; 149 ரன்களில் சுருண்ட மும்பை

மும்பை அணி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டி காக்கும், ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அப்போது, டீகாக் 29 ரன்களும், ரோஹித் சர்மா 15 ரன்களும் எடுத்திருந்தனர்.

news18
Updated: May 12, 2019, 9:20 PM IST
#CSKvMI பந்து வீச்சில் அசத்திய சென்னை வீரர்கள்; 149 ரன்களில் சுருண்ட மும்பை
சென்னை வீரர்கள்
news18
Updated: May 12, 2019, 9:20 PM IST
சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் தொடக்க வீரர்களாக குயின் டி காக்கும், ரோஹித் சர்மாவும் களமறிங்கினர்.

டி காக்கும், ரோஹித் சர்மாவும் நிதானமாக ரன்களைச் சேர்ந்தனர். மும்பை அணி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டி காக்கும், ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அப்போது, டீகாக் 29 ரன்களும், ரோஹித் சர்மா 15 ரன்களும் எடுத்திருந்தனர்.


அதனையடுத்து, மும்பை அணியின் ரன் ரேட் வேகமாக குறைந்தது. அடுத்ததாக, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும், இஷான் கிஷன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கியிரான் பொல்லார்ட் மட்டும் ஓரவுளக்கு அதிரடியாக ஆடினார்.

Also see:

First published: May 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...