முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

மும்பை அணி 2 வெற்றிகளை பதிவு செய்து பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

news18
Updated: April 7, 2019, 11:33 AM IST
முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!
அல்ஸாரி ஜோசப்
news18
Updated: April 7, 2019, 11:33 AM IST
ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய மும்பை அணி வீரர் அல்ல அல்ஸாரி ஜோசப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹைத்ராபாத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொலார்டு 46 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்தார்.

இதன் மூலம் மும்பை அணி 2 வெற்றிகளை பதிவு செய்து பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

மும்பை அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் செய்த சாதனைகள்:

குறைந்த வயதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்
Loading...


ஆண்டு வீரர் அணி வயது எதிரணி
2013 உனத்கட் பெங்களூரு 21 Y 204 D டெல்லி
2019 அல்ஸாரி ஜோசப் மும்பை 22 Y 137 D ஹைதராபாத்
2011 ஈஷாந்த் சர்மா டெல்லி 22 Y 237 D கொச்சி

மும்பை அணியில் தனது முதல் போட்டியில் சாதித்த வீரர்கள் பட்டியல்

ஆண்டு வீரர் விக்கெட்டுகள் எதிரணி
2019 அல்ஸாரி ஜோசப் 6 ஹைதராபாத்
2017 மலிங்கா 3 சென்னை
2008 மார்கண்டே 3 சென்னை
2009 பும்ரா 3 பெங்களூரு

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also watch

First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...