‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

#MumbaiIndians skipper #RohitSharma fined Rs.12 lakh | முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.

news18
Updated: April 1, 2019, 3:33 PM IST
‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!
ரோகித் சர்மா.
news18
Updated: April 1, 2019, 3:33 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மொஹாலியில் நேற்று (மார்ச் 30) நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 60 ரன்கள் விளாசினார். இதனை அடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

MI vs KXIP, IPL
களமிறங்கும் மும்பை - பஞ்சாப் அணிகள். (IPL)


அதிகபட்சமாக, கே.எல்.ராகுல் 71 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும், மயங்க் அகர்வால் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் பேட்டிங்கின்போது, அடிக்கடி பவுலர்களிடம் எதிரணி கேப்டன் ரோகித் சர்மா ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால், போட்டி நேரம் அதிகரித்தது.

இதுகுறித்து போட்டி நடுவர்கள் அளித்த புகாரின்பேரில், பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பைக்கு தோல்வியோடு சேர்த்து அபாரதமும் கிடைத்தது.

Rohit Sharma, Bumrah, IPL
ரோகித் சர்மா மற்றும் பும்ரா. (IPL)
Loading...
மும்பை இந்தியன்ஸ் அணி, 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...



POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626