உலக அளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் போலவே பெண்கள் பங்கேற்கும் டி20 லீக் நடைபெறவுள்ளது.Women’s Premier League (WPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ளன. ஆடவர் ஐபிஎல் போலவே சென்னை, மும்பை, பெங்களூரு என பெண்கள் அணிகள் தொடரில் களமிறங்கவுள்ளன.
இந்நிலையில், WPL போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளர்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பான அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகமும் அதன் உரிமையாளர் நீட்டா அம்பானியும் வெளியிட்டுள்ளனர். அதன் படி, மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரான சார்லோட் எட்வார்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடி பெரும் அனுபவத்தை கொண்ட சார்லெட் எட்வார்ட்ஸ் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்தி ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளை வென்று தந்துள்ளார். மேலும், இவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு பயிற்சி கொடுத்த அனுபவமும் இவருக்கு உள்ளது.
அதேபோல அணியை வழிநடத்தும் மென்டாராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ஜூலான் கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் கோஸ்வாமி, ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெண் வீரர் என்ற சாதனையை கொண்டவர். இவரும் ஓய்வுக்குப் பின் பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வழிநடத்தியவர்,
மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தேவிகா பல்ஷிகார் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் மேலாளராக திருப்தி சந்தாகர் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய பெண்கள் அணியின் மேலாளராக இருந்தவர்.
இந்த நியமனங்கள் குறித்து அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி கூறுகையில், "தலைசிறந்த நபர்களை மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இவர் வீரர்களாக மட்டுமல்லாது பயிற்சியாளராகவும் சிறந்து விளங்கிய அனுபவம் கொண்டவர்கள். பெண் வீரர்கள் நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர். இவர்களின் வருகையால் அடுத்த தலைமுறை பெண்களும் உயரங்களை நிச்சயம் தொடுவர்கள் என நம்புகிறேன்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mumbai Indians, Nita Ambani, WIPL, Women Cricket