முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘மகளிர் ஐபிஎல் தொடர் ஏராளமான இளம் பெண்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்றும்’ – நிடா அம்பானி நம்பிக்கை

‘மகளிர் ஐபிஎல் தொடர் ஏராளமான இளம் பெண்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்றும்’ – நிடா அம்பானி நம்பிக்கை

நிடா அம்பானி

நிடா அம்பானி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் மைதானத்திற்கு வந்து ரசித்துள்ளார்கள். மைதானத்தில் ஏராளமான ரசிகர்களை பார்ப்பது அற்புதமாக இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏராளமான இளம் பெண்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்றும் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நிடா அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று மும்பையில் கோலகலமாக தொடங்கியுள்ளது. தொடக்கப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இந்நிலையில் மும்பை அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய அதன் உரிமையாளர் நிடா அம்பானி, ‘இன்றைய நாள் கிரிக்கெட் விளையாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த தருணம் மகளிர் விளையாட்டு துறையில் முக்கியமான தருணம். மகளிர் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றிருப்பதை மிகவும் த்ரில்லிங்காகவும் சுவாரசியமாகவும் உணர்கிறேன். மகளிர் ஐபிஎல் ஏராளமான இளம் பெண்களின் கிரிக்கெட் கனவை நிறைவேற்றும்.

போட்டியை ரசித்துப் பார்க்கும் நிடா அம்பானி 

விளையாட்டு துறையை இளம் பெண்கள் தேர்வு செய்வதற்கு மகளிர் ஐபிஎல் உதவும். மேலும் நாட்டின் விளையாட்டுத் துறையில் மகளிர் ஐபிஎல் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிதளவும் அச்சமின்றி விளையாடுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியினர் பெயர் பெற்றவர்கள்.

கிரிக்கெட் வீரர்களுடன் நீடா அம்பானி

குஜராத் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகளின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். குறிப்பாக எங்கள் அணியின் கேப்டன் ஆட்டத்தை பாராட்டலாம். என்னவொரு அற்புதமான இன்னிங்சை அவர் ஆடியிருக்கிறார்! அமேலியா கெர்ரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சிலும் அவர் ஜொலித்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் மைதானத்திற்கு வந்து ரசித்துள்ளார்கள். மைதானத்தில் ஏராளமான ரசிகர்களை பார்ப்பது அற்புதமாக இருந்தது. இது மகளிர் அணிக்கு இருக்கும் ஆதரவை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து இளம் பெண்களுக்கு ஆதரவாக இருப்போம். அவர்கள் மென்மேலும் சாதிக்கட்டும். அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: WIPL