இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்பட திறமை மிக்க வீராங்கனைகளை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றிருப்பதாக அதன் உரிமையாளர் நீதா அம்பானி கூறியுள்ளார். நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை அணி நட்சத்திர ஆட்டக்காரர்களை தனது அணியில் எடுத்திருக்கிறது. இந்த ஏலத்தில் மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி நேரடியாக பங்கேற்று வீராங்கனைகளை அணியில் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு தலைமை பயற்சியாளராக சார்லோட் எட்வர்ட்ன்ஸ், பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் அணியின் ஆலோசகராக ஜுலன் கோஸ்வாமி, பேட்டிங் பயிற்சியாளராக தேவிகா பால்ஷிகார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏலம் குறித்து நீதா அம்பானி கூறியதாவது- ஏலங்கள் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்த ஏலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது டபிள்யூ.பி.எல். தொடருக்கான முதல் ஏலம். இதுவொரு வரலாற்று நிகழ்வு. பெண்களின் திறமையை எல்லோரும் கொண்டாடுவதை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அணி என்ற அடிப்படையில் ஏலத்தில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை அணியில் எடுத்திருப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறோம். ஏற்கனவே ஆண்கள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸில் இருக்கிறார். இருவரும் தொழில் ரீதியில் அபாரமான திறமையை கொண்டவர்கள். அணியில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு இருவரும் முன்மாதிரியாக இருப்பார்கள். திறமை வாய்ந்த வீராங்கனைகளை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.
யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். சீனியர் அணியும் உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தியாவை பொருத்தளவில் விளையாட்டு என்பது பெண்களுக்கு ஓர் திருப்பு முனை. இந்தியாவின் இளம் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி சாதனை படைக்கின்றனர். விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் வீராங்கனைகளுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket