கடைசி ஓவரில் 3 விக்கெட்: அசத்திய மலிங்கா - மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு

மும்பை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், ஜேசன் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

news18
Updated: April 15, 2019, 10:07 PM IST
கடைசி ஓவரில் 3 விக்கெட்: அசத்திய மலிங்கா - மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு
ஐபிஎல்
news18
Updated: April 15, 2019, 10:07 PM IST
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது.

மும்பை-பெங்களூரு அணிகள் மோதும் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை அணி.

பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய பார்த்திவ் பட்டேல் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


இரண்டு பேரும் அரை சதம் கடந்தனர். மோயின் அலி 50 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 75 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்களை எடுத்தது.



மும்பை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், ஜேசன் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

Also watch

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...